தமிழ் நாட்டில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுபவர்கள் அபராத வரி விதிப்பு தொகையை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள் - ஜவஹருல்லா
சென்னை, 07 பிப்ரவரி (ஹி.ச.) மனிதநேய மக்கள் கட்சியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு மன்னடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வழங்கினார். இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,
Java


சென்னை, 07 பிப்ரவரி (ஹி.ச.)

மனிதநேய மக்கள் கட்சியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு மன்னடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,

தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக இடைவிடாமல் மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய பணிகளிலே மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டு இருக்கின்றது...

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த 18 ஆண்டுகளிலேயே மிக மோசமான வெள்ள பாதிப்பு சென்னை மட்டுமல்லாமல் சென்னை சுற்றி இருக்கக்கூடிய மாவட்டம் மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டம் தென்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் நிவாரண உதவிகளை மட்டும் வழங்குவதோடு நிறுத்தாமல் பாதிக்கப்பட்ட அந்த நேரத்திலே களத்திற்கு சென்று அரசு அமைப்புகளுக்கு இணையாக அவர்களை மீட்க கூடிய அந்த மனிதநேய பணிகளை செய்தது மனிதநேய மக்கள் கட்சி.

இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடு இந்த நாடு சமூக நல்லிணக்கத்தை தலைதூங்க கூடிய ஒரு நாடு அதனை தான் நம்முடைய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் எந்த நிகழ்வு நடந்தலும் உரக்க குரல் கொடுத்து பாடுபடக்கூடிய ஒரு கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் அதேபோல உள்ளாட்சி மன்றத்திலும் களமாடி வந்திருக்கின்றது

தமிழ்நாட்டிலே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

கல்விக்கு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதிகளை தராமல் தடுத்து நிறுத்தக்கூடிய வஞ்சகத்தை மத்திய அரசு செய்தாலும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு இன்றைக்கு தமிழ்நாடு குறிப்பாக கல்வித்துறையில் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றால் அது அந்த துணிச்சல் அந்த சிறப்பான செயல்பாடு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

தமிழ்நாட்டை கவனிக்கரம் செய்து இங்கே இந்த சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதற்கும் தமிழ்நாட்டினுடைய உரிமைகளை பறிப்பதற்கும் இன்றைக்கு அதிமுக தமிழ்நாட்டினுடைய உரிமைகளை நசுக்கக்கூடிய பாஜக உடன் எதிர் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நிலையை பார்க்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான தியாகம் செய்யாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு இன்று அரசியல் களத்தில், இன்னொருவர் குதித்து இருக்கிறார்.

இவர்களெல்லாம் தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக வேண்டி போராடி இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் ஆணித்தரமான பதிலாக இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் விரைவிலே அறிவிக்கப்பட இருக்கின்றது இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்கு விரோதமாக பாஜகவுடன் கை கோர்த்து அதிமுக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய இந்த நல்லாட்சியை வீழ்த்துவதற்காக பேசுவதெல்லாம் வெறும் தத்துவம் தான் ஊழலை ஒழிப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள் 15 கோடி ரூபாய்க்கு அந்த வரியை செலுத்தாததற்காக வேண்டி நீதிமன்றம் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வரியை செலுத்தாமல் ஊழலை ஒழிக்க வந்த போராளி என்று மேடையெல்லாம் பேசக்கூடியவர்களுக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் 1.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

திரைப்படத்தில் மட்டும் தான் நடிக்கின்றார்களே தவிர நிஜ உலகிலும் அவர்கள் ஏமாற்றுவதற்காக வந்திருக்கக்கூடிய நடிகர்கள் தான் இந்த நடிகர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டை நிமிர வைக்க மாட்டார்கள் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

மனிதநேய மக்கள் கட்சியின் பதினெட்டாம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது எனவும் மக்கள் தொகை ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் மனிதநேய மக்கள் கட்சிக்கு பெரிய அரசியல் கட்சிக்கு நிகராக உரிய மரியாதை தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14 முஸ்லிம் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் எந்தவகையில் மனித நேயம் மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் திமுக ஒதுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியிடம் பெற்று இருக்கிறது எனவும் கூட்டணியில் வெற்றிக்காக எங்கள் தோழர்கள் பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்காமல் ஓடி ஒளியும் செயல் கேவலமான செயலாக இருக்கிறது மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் பெண் உறுப்பினர்கள் மோடியை தாக்க முன்வந்தார்கள் என்று உளவுத்துறை சொல்வது அப்பட்டமான பொய் எனவும் உளவுத்துறை தங்களுக்கு அப்படிப்பட்ட தகவலை தந்ததாக பாஜக என்று சொல்கிறார்கள்.

சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருக்கிறார் எனவும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோத கொள்கை உடைய பாஜக அதை நிரூபிக்க கூடிய வகையில் இந்த விவகாரத்தில் நடந்து வருகிறது மேலும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பார்த்து பயப்படுவது அஞ்சுவது வெட்கக்கேடான ஒரு நிகழ்வாகும் என அவர் தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சியை தொடங்கிய உடனே 2009,2014 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டோம் இதைதொடர்ந்து 2011,2016 சட்டமன்ற தேர்தலிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

இப்போது தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது அந்த வழக்கு வரக்கூடிய தீர்ப்பின் அடிப்படையில் எங்கள் முடிவிற்கும் என அவர் தெரிவித்தார்.

கடந்த முறை கொடுத்த பாபநாசம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிகள் எங்களுடைய விருப்ப பட்டியலில் இருக்கவில்லை ஆனாலும் வாங்கினார்கள் வெற்றி பெற்றுள்ளோம் இந்த முறை விருப்ப பட்டியலில் இருக்கக்கூடிய தொகுதிகளை கேட்டு பெறுவோம்.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தேர்தல் நடக்கக்கூடிய நேரத்தில் பெரிய அழுத்தமாக திமுகவிற்கு தெரியவில்லை முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த தேர்தலில் எப்படி அனைவரையும் ஒருங்கிணைத்தாரோ அதேபோல் இந்த தேர்தலிலும் அனைவரையும் ஒருங்கிணைப்பார்.

நாளைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர் அமைப்பு வெள்ளி விழா மாநாடு கல்வி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் நடைபெறுகிறது தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ