Enter your Email Address to subscribe to our newsletters

மங்களூர், 7 பிப்ரவரி (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பதவி உயர்வு பெறுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
மங்களூரில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவரிடம், எப்பொழுது முதலமைச்சராக பதவி உயர்வு பெறுவீர்கள் என்று செய்தியாளர்கள் வினவிய போது,
அதற்கு பதிலளித்த டி.கே. சிவக்குமார்,
பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் விருப்பம் உள்ளது.
இருப்பினும், கட்சியின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், மாநில பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்னர் அவருடைய முதலமைச்சர் பதவி ஏற்பை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, காலம் அதற்கு பதில் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு பட்டியலின மக்கள் கோரிக்கை வைப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
இதில் எந்த தவறும் இல்லை. ஆதரவாளர்கள் அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அவர்களை வேண்டாம் என்று நாம் கூற இயலாது என்றும் பதிலளித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM