Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 07 பிப்ரவரி (ஹி.ச)
தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 10.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு குறைகள் நிவர்த்தி செய்திட தங்களது மனுக்கள் இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து தொலைபேசி எண் குறிப்பிட்டு பயன்பெறுமாறு, மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தூத்துக்குடி மாவட்டம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b