Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 பிப்ரவரி (ஹி.ச.)
சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் நாளை (பிப்ரவரி 9) அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக,
இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த புதிய தொலைபேசியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி சிறப்பம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி சிப்செட் உடன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து செயலிகளையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
மேலும், சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த டிஸ்ப்ளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போன், 50எம்பி முதன்மை கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் மூலம் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. கூடுதலாக, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த தொலைபேசியில் உள்ளன. சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் IP52 மதிப்பீட்டுடன் கூடிய டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியுடன் வெளிவரும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். கூடுதலாக மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவும் இதில் உள்ளது. மெமரி கார்டு பயன்படுத்துவதற்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த தொலைபேசியில் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இதனால், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும், இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
இது தவிர, இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் இன்னும் பல சிறப்பான வசதிகள் உள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்70இ 5ஜி ஆனது ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM