ஜனநாயகன் படம் சான்றிதழ் தொடர்பாக சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகியதால் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம் பதிவு துறைக்கு கடிதம்
சென்னை, 09 பிப்ரவரி (ஹி.ச.) ஜனநாயகன் படம் சான்றிதழ் தொடர்பாக சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம் பதிவு துறைக்கு கடிதம் அளித்துள்ளது. பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்திர
Jananayakan


சென்னை, 09 பிப்ரவரி (ஹி.ச.)

ஜனநாயகன் படம் சான்றிதழ் தொடர்பாக சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம் பதிவு துறைக்கு கடிதம் அளித்துள்ளது.

பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கு வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில் நீதிபதி பிடி ஆஷா முன் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆஷா ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

Hindusthan Samachar / P YUVARAJ