கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா
கோவை, 09 பிப்ரவரி (ஹி.ச.) கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் பள்ளி வாசலில் அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ர
W


கோவை, 09 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் பள்ளி வாசலில்

அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும் விழா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் தலைவர் ஹாஜி முகம்மது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாகிகள் முகம்மது ரபீக்,நாசர்,காஜா முகம்மது,சம்சுதீன்,நாசர்,

அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

இதில் செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்பு ஆற்றினார்.

மேனேஜர் சுலைமான் ஆண்டறிக்கை வாசித்தார்.

மௌலானா மௌலவி அப்துல் மாலிக் சிராஜி துவக்கவுரை வழங்கினார்.

ஆலீம் படித்த மாணவ,மாணவிகளுக்கு முஹம்மது இப்ராஹிம்

அப்துல் ரஹ்மான்

அலஹாஜ் A.அப்துல் மாலிக் சிராஜி K. M. முஹம்மது அலி ஹஜ்ரத்S. Sஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத்,A.சித்திக் அல்ஹசனி நிஜாமீ ,முகம்மது பாரூக்,அக்பர் அலி,அசனார் ஆகியோர் பட்டம் வழங்கி வாழ்த்துரை

வழங்கினர்.

Hindusthan Samachar / Durai.J