பிரபல நடிகர் சல்மான் கான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை உத்தவ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சனம்
மும்பை, 9 பிப்ரவரி (ஹி.ச.) ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) நூறாண்டு கொண்டாட்டம் நேற்று மும்பை ஒர்லியின் நேரு மையத்தில் ஆரவாரமாகத் துவங்கியது. பிரபல நடிகர் சல்மான் கான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை உத்தவ் சிவசேனா கட்சியைச் ச
பிரபல நடிகர் சல்மான் கான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை உத்தவ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சனம்


மும்பை, 9 பிப்ரவரி (ஹி.ச.)

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) நூறாண்டு கொண்டாட்டம் நேற்று மும்பை ஒர்லியின் நேரு மையத்தில் ஆரவாரமாகத் துவங்கியது.

பிரபல நடிகர் சல்மான் கான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை உத்தவ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

ஜனத்திரளைக் கூட்டுவதற்காக சல்மான் கானை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்களா? அல்லது இப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இஸ்லாமியர்களுக்கும் ஒரு இடமுண்டு என்பதை உலகிற்கு பறைசாற்றுவதற்கான நாடகமா? இது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெளிவுபடுத்த வேண்டும்.

என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM