Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 பிப்ரவரி (ஹி.ச.)
தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
TNPSC குரூப் 2 , 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
இது போதுமான நடவடிக்கை அல்ல ; ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியிடங்கள் , முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படியான TNPSC தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது. இது எந்த விதமான வெளிப்படைத்தன்மையையோ , நம்பிக்கையையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது.
TNPSC குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும்.
தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ