Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னையில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ஹோட்டலில் இலவசமாக உணவு கொடுக்குமாறு கேட்டு அராஜகம் செய்த காணொளி அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னையில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ஹோட்டலில் இலவசமாக உணவு கொடுக்குமாறு கேட்டு அராஜகம் செய்த காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இளைஞர்களிடம் ‘உங்கள் அப்பா' என்று கூறிவிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களை வளர்க்கும் முறை இதுதானா? ஒரு தந்தையாக நீங்கள் கண்டிப்பதை விட்டுவிட்டு டாஸ்மாக்கின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழித்து உங்கள் பிள்ளைகளை இப்படி பொறுப்பற்ற முறையில் சமுதாயத்தில் வளர விடுவதுதான் உங்கள் திராவிட மாடலா..? போதைக் கலாச்சாரம் எந்த அளவிற்கு தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது என்பதற்கு நித்தமும் பல செய்திகள் வந்து கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா? அறிவாலயம் என்று உங்கள் கட்சித் தலைமை பெயரை வைத்து விட்டு தமிழக இளைஞர்களை போதையால் மதி இழந்தவர்களாக மாற்றி இளைஞர் சக்தியை இப்படி பாழ்படுத்தி வைத்திருப்பது விடியா திமுக ஆட்சியின் வெட்கக் கேடு.. #DMKfailsTN
இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ