Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.இதையடுத்து, ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் நேற்று (28.02.2026) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ளார்.
காமேனி கொல்லப்பட்டதை ஈரானும் உறுதி செய்துள்ளது.காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறு நாள் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே இயங்கும் அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளை (மார்ச் 01) டெல்லி மற்றும் மும்பையிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கான விமானங்கள் உட்பட முக்கிய சேவைகள் ஆம்ஸ்டர்டாம், சூரிச், மிலன், வியன்னா மற்றும் பிராங்பேர்ட் ஆகிய வழித்தடங்களுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் பதற்றமான சூழல் காரணமாக தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டினரும், தங்கள் விசா நீட்டிப்பு தொடர்பான உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b