திமுக தரும் 25 தொகுதிகளை ஏற்க முடியாது - கிரிஷ் ஜோடங்கர் திட்ட வட்டம் !
தமிழ்நாடு, 01 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு அரசியல் களத்தில் திடீர் திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் கூட்டணி கணக்குகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடுபிடித்துள்ளது. ஆளும் திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் புதிதாக இணைந்துள்ளதால் கேட்கும் தொ
கிரிஷ் ஷோடங்கர்


தமிழ்நாடு, 01 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசியல் களத்தில் திடீர் திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் கூட்டணி கணக்குகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடுபிடித்துள்ளது.

ஆளும் திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் புதிதாக இணைந்துள்ளதால் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாமல் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு திணறி வருகிறது.

காங்கிரஸ் கட்சி இந்த முறை 40 தொகுதிகளை கேட்டு வருகிறது.

அதோடு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கேட்டு குடைச்சல் தந்து வருகிறது. நீண்டநாட்களாக இரு கட்சிகளிடையே உரசல் இருந்து வந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், திமுக தங்களுக்கு கடந்த முறையைப் போலவே 25 தொகுதிகளை தெரிவித்ததாகவும் தாங்கள் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு மாநிலங்களவையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளதாகவும் மாநில சட்டப்பேரவையில் தான் பிரதி நிதித்துவம் இல்லை என்றும் அவர் கூறினார்.

கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போதைக்கு திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam