Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 மார்ச் (ஹி.ச)
திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாநகரில் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலக கட்டிடம் ரூ.235 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் ரூ.50 கோடியிலும், தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடியிலும் என்று மொத்தம் ரூ.290 கோடியில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ளது. தற்போது இந்த நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருச்சியில் உலகத்தரத்துடன் ரூ.290 கோடியில் காமராஜர் நூலகம், அறிவுசார் மையம் தரைத்தளத்துடன் சேர்த்து 8 தளங்களுடன் அமையும் இந்த நூலகத்தில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளன.
குறிப்பாக நகரும் படிக்கட்டுகள், 2 கண்ணாடி மின்தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
தற்போது சுமார் 75 சதவீதம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஓரிரு மாதங்களில் திறப்பு விழா காணும் வகைளில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த முன்னேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b