நாக்பூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி, 01 மார்ச் (ஹி.ச.) மகாராஷ்டிராவில் சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் நாக்பூர் மாவட்டம், காடோல் வட்டம், ரால்கோன் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நி
Rs 2 lakh financial assistance


புதுடெல்லி, 01 மார்ச் (ஹி.ச.)

மகாராஷ்டிராவில் சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் நாக்பூர் மாவட்டம், காடோல் வட்டம், ரால்கோன் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவல்களை நாக்பூர் காவல் கண்காணிப்பளர் ஹர்ஷ் போடார் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில்

இத்துயரச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.

இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Hindusthan Samachar / vidya.b