Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 2) முதல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வை 27,783 தனித் தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதவுள்ளனர்.
பொதுத்தேர்வை எழுதவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது,
நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது அரசு இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b