பிரதமர் மோடியை வரவேற்பதில் முதல்வருக்கு என்ன பிரச்னை? - தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி
மதுரை, 01 மார்ச் (ஹி.ச.) தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மதுரையில் இன்று (01-03-26) மாலை பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மதுரை வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்கள
பிரதமர் மோடியை வரவேற்பதில் முதல்வருக்கு என்ன பிரச்னை? - தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி


மதுரை, 01 மார்ச் (ஹி.ச.)

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மதுரையில் இன்று (01-03-26) மாலை பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மதுரை வந்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அச்சாரமாக இருக்கும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. தமிழ் கலாசாரம் என்றாலே யாராக இருந்தாலும் வரவேற்பது.

பொய்யாக தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் சனிக்கிழமை நமது மாநிலத்திற்கு வந்த பிரதமரை வரவேற்பதில் என்ன பிரச்னை. அவர் அரசியல் வாதியாக வரவில்லை தமிழ்நாட்டுக்கான நல்ல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகிறார். இப்படிதான் தெலுங்கான முதல்வராக இருந்த கே.சந்திரசேகர்ராவ் செய்து கொண்டே இருந்தார். இப்போது வீட்டில் இருக்கிறார் என்றார்.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடன் உள்ள கலாசாரம் ஒழிய வேண்டும். அரசியலைத் தாண்டி நல்ல கலாசாரம் திமுகவினால் மறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை சமர்ப்பிக்க வந்திருக்கும் பிரதமரை முதல்வர் வரவேற்று இருக்க வேண்டும்.

ஜனநாயக முறைப்படி நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். கூட்டணி கட்சியினாரை திமுக சின்னத்தில் நிற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்திக்கும். அவர்களது விளம்பரங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டும் மாதங்களில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மதுரை பொதுக் கூட்டத்தில் எந்த படம் இருக்க வேண்டும் என்பது மாநாடு நடத்துவர்களின் உரிமை.

திமுக பொதுக்கூட்டத்தில் முருகன் படம் வைக்க முடியுமா? மதுரையில் திமுக மாநாட்டில் மீனாட்சி படம் வைக்க முடியுமா? அவரவர்கள் கொள்கையை அவா்களது மாநாட்டில் வைக்க வேண்டும் என நினைக்கிறாா்களோ அதை வைக்கிறார்கள்.

மாநாடு நடத்துபவர்கள் எந்த கொள்கைகளை பின்பற்றுகிறார்களோ அந்த படங்களை வைக்கிறார்கள்.

என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b