தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பு பொ
10th Grade Public Exam


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 11) தொடங்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

இது தவிர, பத்தாம் வகுப்பில் 395 சிறைவாசிகளும் எழுத பதிவு செய்துள்ளனர். பத்தாம் வகுப்புக்கு 4219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் நடக்கும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 49 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்க சுமார் 4900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுகளில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

தேர்வுகளில் பின்பற்றப்பட உள்ள புதிய நடைமுறைகள் பின்வருமாறு:

தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு கேள்வித்தாள் வழங்கிய பிறகு, ஒவ்வொரு தேர்வு அறையிலும் மீதம் உள்ள கேள்வித்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறை காரணமாக கேள்வித்தாளின் ரகசியம் மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது.

சொல்வதை எழுதுபவர் சலுகையை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு வழங்க 5 கேள்வித்தாள்கள் கேள்வித்தாள் உறை அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த நடைமுறை காரணமாக, கேள்வித்தாளின் ரகசியம் மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது.

தேர்வுப் பணிகளில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்தும் வகையில் சொல்வதை எழுதுவோர் நியமனங்களில் பிஎட், டிடிஇடி, கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி பணியாளர்களை தன்னார்வலர்களாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும், அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

நேரடித் தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யவும், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிப்பதை உறுதி செய்யவும், ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு 12 ஆயிரத்து 467 பள்ளிகள் இடம் பெறுகின்றன.

தேர்வறை கண்காணிப்பாளர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 49 ஆயிரத்து 542 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிஸ்லெக்சியா மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியருக்காக சொல்வதை எழுதுவோர் எண்ணிக்கையை பொருத்தவரையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு 12 ஆயிரத்து 292 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b