அரியானாவில் கட்டட வேலை பணியின்போது சுவர் சரிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சண்டிகர், 10 மார்ச் (ஹி.ச.) அரியானா மாநிலத்தில் குருகிராம் வட்டாரத்தில் சித்ராவாலி என்ற இடத்தில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த வேலையில் ஏறத்தாழ 15 வேலையாட்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு கட்டட வேலை நடந்தபோது ய
அரியானாவில் கட்டட வேலை பணியின்போது சுவர் சரிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு


சண்டிகர், 10 மார்ச் (ஹி.ச.)

அரியானா மாநிலத்தில் குருகிராம் வட்டாரத்தில் சித்ராவாலி என்ற இடத்தில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது.

இந்த வேலையில் ஏறத்தாழ 15 வேலையாட்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு கட்டட வேலை நடந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது.

இதில் வேலை செய்து கொண்டிருந்த 15 தொழிலாளர்களும் அந்த இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைவாக வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 நபர்களை பத்திரமாக மீட்டனர்.

இருந்த போதிலும், இந்த துயர சம்பவத்தில் 7 பேர் தங்கள் உயிரை இழந்தனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM