மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மார்ச் 13-ம் தேதி வரை நிறுத்தம் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியை மூடிவிட்டன. இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவையை மார்ச் 13 வரை நிறுத்தி வைப்பதாக
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மார்ச் 13 வரை நிறுத்தம் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு


புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியை மூடிவிட்டன.

இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவையை மார்ச் 13 வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஈரான் மீது போர் தாக்குதல் நடந்த காரணத்தால் வான்வழிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான சேவையை பல நாடுகளும் ரத்து செய்து வருகின்றன.

அதேபோல, இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகள் வழியாகச் செல்லும் சர்வதேச விமான சேவையை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளது.

இந்த தற்காலிக நிறுத்தம் மார்ச் 10 வரை இருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது.

தற்போது, இது மார்ச் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானம் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம்.

அல்லது பயணத்தை ரத்து செய்து, செலுத்திய முழு தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM