Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 10 மார்ச் (ஹி.ச)
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த சூழலில் மூன்றாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
திருச்சியில் நாளை
(மார்ச் 11-ம் தேதி) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,
பாரத பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வருகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11.03.2026) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே நாளை (11.03.2026) முழுவதும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b