Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 10 மார்ச் (ஹி.ச.)
ஹரியானா மாநிலம் சோனிப்பேட் மாவட்டம் மடினா கிராமத்தை சேர்ந்த விவசாயியான சஞ்சய் மாலிக் மகள் தனுவின் திருமண விழா இன்று நடைபெற்றது.
இன்று காலை ஹரியானா வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு அந்த கிராமத்திற்கு சென்ற ராகுல் காந்தி விவசாயி சஞ்சய் விளைநிலத்தில் நாற்று நாட்டு சஞ்சய் மாலிக் குடும்பத்துடன் கலந்துரையாடினார்.
அப்போது தனது மகள் தனுக்கு திருமணம் நடைபெறும்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ராகுல் காந்தியிடம் சஞ்சய் வேண்டுகோள் விடுத்தார்.
சஞ்சய்யின் வேண்டுகோளை ஏற்று அவரது மகள் தனு திருமண விழாவில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார்.
ராகுல் காந்தி வருகையை அறிந்த கிராம மக்கள் சஞ்சய் வீட்டின்முன் குவிந்தனர்.
Hindusthan Samachar / vidya.b