ரூ.100 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பிடிபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது!
ராமநாதபுரம், 10 மார்ச் (ஹி.ச.) ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் மெத்தப்ட்டமைன் போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் மண்டபத்தைச் ச
Arrest


ராமநாதபுரம், 10 மார்ச் (ஹி.ச.)

ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் மெத்தப்ட்டமைன் போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் மண்டபத்தைச் சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா, முகைதீன் பயாஸ் ஆகிய இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த கடத்தலின் முக்கிய பிரமுகரான ஷேக் ரஹ்மான் என்பவரை தேடி வந்தனர்.

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் ஒரு கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் பிடித்து விசாரித்த போது அவர்தான் 100 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தலில் தேடப்பட்டு வந்த சேக் ரஹ்மான் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருடன் சேர்த்து ஷேக் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேரையும் வருகிற 16-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புதுக்கோட்டை சிறையில் குற்றவாளிகள் மூன்று பேரையும் அடைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN