கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து - 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு, 10 மார்ச் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கன்னிவாக்கம் பகுதியில் பார்த்திபன் (வயது 33) என்பவரும், அவரது மனைவி ஜெயசித்ரா (வயது 29) மற்றும் அவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வந்தனர்.
கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து - 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு, 10 மார்ச் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கன்னிவாக்கம் பகுதியில் பார்த்திபன் (வயது 33) என்பவரும், அவரது மனைவி ஜெயசித்ரா (வயது 29) மற்றும் அவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வந்தனர்.

நேற்று இரவு மூவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது கொசுவர்த்தி சுருளால் இன்று (10.03.2026) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மூவரின் உடல்களையும் மீட்டனர்.

மேலும் இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,

வீட்டில் ஏற்றப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் மூலம் அருகில் இருந்த துணியில் தீப்பற்றியதாகவும், அதோடு மின் கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர், இந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவியுள்ளது.

அச்சமயத்தில், தூக்கத்திலிருந்த மூவரும் வீட்டிற்குள்ளேயே சிக்கி உடல் கருகிப் பலியாகியுள்ளனர்.

என தெரிய வந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b