Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மத்திய அரசு அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சமையல் எரிவாயு கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவு இருப்பு உள்ளதா? என எண்ணெய் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
அதோடு கையிருப்பில் உள்ள சமையல் சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்கள் குறித்த விவரத்தை இன்று (10.03.2026) மதியத்திற்குள் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கேஸ் நிறுவனம், பாரத் கேஸ் நிறுவனம் மற்றும் ஹெச்.பி கேஸ் நிறுவனத்திடம் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரத்தை தெரிவிக்கும்படி அந்தந்த நிறுவனங்களுக்குத் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று (09.03.2026) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (10.03.2026) மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b