Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 10 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவது தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாநகரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உணவகங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக பெங்களூரு நகர உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை விஷயத்தில் பிரதமர் மோடி அவர்கள் தலையிட்டு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உணவக உரிமையாளர் சங்கங்கள் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM