Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இருந்து கடலோர கர்நாடகா வரை காற்றின் கீழ்தட்டு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று தொடங்கி வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM