Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.)
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது.
அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை நடை பெற உள்ள நிலையில், இன்று என்சிஇஆர்டி பொது மன்னிப்பு கோரி உள்ளது.
பொது மன்னிப்பு கோரி என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சமீபத்தில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை வெளியிட்டது. அதில், நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது.
என்சிஇஆர்டி இயக்குநரும் உறுப்பினர்களும் அந்த பாடம் இடம் பெற்றதற்காக எவ்வித நிபந்தைனகளும் இன்றி முழுமையான மன்னிப்பை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறார்கள். அந்த புத்தகங்கள் முழுயைாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. அவை இனி கிடைக்காது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b