அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை - நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.) ஜன் தன் மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் மதரதிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவி
நிர்மலா சீதாராமன்


புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.)

ஜன் தன் மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் மதரதிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கு (BSBDA), குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததற்கான அபராதம் விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

நாட்டில் உள்ள சுமார் 72 கோடி அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை தொடர்பான எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் ஜன் தன் யோஜனா கீழ் தொடங்கப்பட்ட கணக்குகள் மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் (BSBDA) இருப்புத் தொகை பூஜ்ஜியமாக இருந்தாலும் வங்கிகள் அபராதம் வசூலிக்கக் கூடாது.

இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் மற்றும் ATM கார்டு போன்ற அடிப்படை சேவைகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

கடந்த 2022-23 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் இதர சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காததற்காக சுமார் 8,092.83 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளன.

இது வங்கிகளின் மொத்த வருவாயில் வெறும் 0.23% என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகள் பல இந்த அபராத முறையைத் தளர்த்தியுள்ள நிலையில், HDFC, Axis போன்ற தனியார் வங்கிகள் இன்னும் இந்த அபராதத்தை வசூலித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam