கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி - சரத்குமார் இரங்கல்
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில
Sarathkumar


Dh


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சென்னை கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியில், கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் பார்த்திபன், மனைவி ஜெயசித்ரா மற்றும் அவர்களின் 2 வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக தனது இல்லத்திலேயே எதிர்பாராத விதமாக ஒரு குடும்பமே உயிரிழந்தது பெரும் சோகத்தை அளிக்கும் மனதை உலுக்கும் சம்பவமாகும்.

சிறு கவனக்குறைவுகள் கூட பெரிய துயரங்களுக்கு காரணமாகலாம். எனவே எந்தவொரு விஷயங்களிலும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ