Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 மார்ச் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் கண்டார்மங்கலத்தைச் சேர்ந்த கருப்பையா உயர்நீதிமன்ற மதுரை
அமர்வில்,
சிவகங்கை மாவட்டம் கண்டார்மங்கலம் கிராமத்தில், அரசு மற்றும் பொதுமக்கள்
பங்களிப்புடன் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
2022 ஆம் ஆண்டு கட்டிட
பணிகள் நிறைவடைந்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.
இது குறித்து
கேட்டபோது கட்டிடத்தில் விரிசல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நீதிமன்றம் கட்டிடத்தின் உறுதி தன்மையை
உறுதி செய்ய குழுவை அமைத்தது.
அந்தக் குழு கட்டிடம் உறுதித் தன்மையுடனே
இருப்பதாக 2023 அறிக்கை அளித்தது.
இருப்பினும் ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
ஆகவே சிவகங்கை மாவட்டம்
கண்டார்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தரப்பில்,
வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால் ஆரம்ப சுகாதார நிலையம் பயன் பாட்டிற்கு
கொண்டு வரப்படவில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதிகள், தங்களுடைய இயலாமைக்கு நீதிமன்றத்தை காரணம் காட்டுகின்றனர், எனக் குறிப்பிட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கினை
எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது
மாவட்ட ஆட்சியர் தரப்பில்,
நிர்வாகக் காரணங்களை விளக்கும் வகையிலேயே, பதில் மனுவில் அவ்வாறு கூறப்பட்டு
இருந்தது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை.
தான் தெரிவித்த விதம் தவறு
எனில், நிபந்தனையற்ற மன்னிப்பு கூறுகிறேன் என தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி தனது விளக்கங்களை தெரிவித்தால், அது
குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், திங்கட்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி
இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam