Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் திட்டத்தில், பயணிகளின் வசதிக்காக 2 நவீன பல மாடி வாகன நிறுத்தும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இரண்டு பக்கங்களிலும் இருக்கின்ற இந்த கட்டிடங்களில் கடைகள் மற்றும் நவீன பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
இப்போது, காந்தி இர்வின் சாலைப் பக்கத்தில் உள்ள பல மாடி கட்டிடத்தின் 2,3,4-வது தளங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் முழுமையாக தயாராக உள்ளன.
இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்கும் தகுதியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம், வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே போவதை ஒழுங்குபடுத்துதல், வாகனங்களை வரிசையாக நிறுத்துவதை உறுதி செய்தல் மற்றும் அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் போன்ற வேலைகளைச் செய்யும்.
ஒப்பந்தம் www.ireps.gov.in என்ற இணையதளம் மூலம் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM