Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
பொதுவாக, குளிர்சாதனப் பெட்டி பழைதாகும்போது அதில் எண்ணற்ற சிக்கல்கள் எழுகின்றன.
தற்போது பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், கோடைக்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதனுள் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவற்றில் முக்கியமான ஒன்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீர் கசிவு ஏற்படுவது. இது வீட்டில் உள்ளவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடிய ஒரு விஷயமாகும். ஆனால், இதனை எவ்வித செலவுமின்றி வீட்டிலேயே எளிதாக சரிசெய்ய முடியும்.
பொதுவாக, குளிர்சாதனப் பெட்டி அதிக நாட்கள் இயங்கிக் கொண்டிருந்தால் பழுதடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீர் கசிவு ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக சரிசெய்வது நல்லது.
இதற்காக பழுது நீக்கும் வல்லுநரை அழைக்கத் தேவையில்லை.
நீங்களே வீட்டில் சரிசெய்து கொள்ளலாம்.
அதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்:
முதலில், குளிர்சாதனப் பெட்டியினை அணைத்துவிடவும். பின்னர் ஷட்-ஆஃப் வால்வை இயக்கவும். பின்பு, நீர் இணைப்பினைப் பரிசோதிக்கவும்.
அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை மாற்ற வேண்டும்.
தேவைப்பட்டால், பழுது நீக்கும் வல்லுநரின் உதவியுடன் இதனை மேற்கொள்ளலாம். ஆனால் இந்த சிக்கல் நீர் செல்லும் பாதையில் பனிக்கட்டி உருவானதால் ஏற்பட்டால், உறைந்த பனியை உருக்க வைக்க வேண்டும். இதற்கு ஏறத்தாழ நான்கு மணி நேரம் வரை குளிர்சாதனப் பெட்டியை இயக்காமல் இருக்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீர் கசிவு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பனிக்கட்டி வடிகால் அடைபட்டிருகலாம். இது குளிர்சாதனப் பெட்டி உறைந்து போவதைத் தடுப்பதோடு, தானாகவே உறைந்து போகவும் காரணமாக அமைகிறது.
உணவுத்துகள்கள் அல்லது இதர கழிவுகளால் பனியை அகற்றுவதற்காக இருக்கக்கூடிய வடிகால் அடைத்துக்கொள்ளலாம்.
முதலில் உறைந்த பனியை உருக்க வைக்க வேண்டும். வெந்நீரைக் கொண்டு இதனைச் செய்யலாம். அது சரியாகவில்லையென்றால், சிலர் பைப் சுத்திகரிப்பான் அல்லது கம்பி கொக்கியை வைத்து பனிக்கட்டியை உடைக்க முயற்சி செய்வார்கள்.
நீர் வடிகாலில் மிகவும் ஆழமாக அடைப்பு இருந்தால், நீர் வால்வை அகற்ற வேண்டியிருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியை சுவருக்கு மிக அருகில் வைக்கக்கூடாது. உங்களிடம் பழைய குளிர்சாதனப் பெட்டி இருந்தால், அதனுடைய வடிகால் தொட்டியில் அதிக அழுத்தம் காரணமாக நீர் கசிவு பிரச்சனைகள் வரலாம்.
குளிர்சாதனப் பெட்டி சுவரிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை கவனிக்கவும். அது தவறாக இருந்தால், அதனைச் சரியாக திருப்பி வைக்கவும்.
இதற்கு நீங்கள் தாங்கியை உபயோகப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, அது சுவரிலிருந்து ஐந்து முதல் ஆறு அங்குலம் தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
மேற்கூறிய தீர்வுகளை எல்லாம் முயற்சி செய்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீர் கசிவு சரியாகவில்லையென்றால், தொழில் நுட்ப வல்லுநரை அழைத்து சரி செய்யலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM