Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மார்ச் (ஹி.ச.)
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று லோக்சபாவில் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது, நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன் வைத்த குற்றச்சாட்டிற்கு பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் பதிலளித்து பேசினார்.
பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது,
நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளாகும். பிரதமர் மோடி ஒருபோதும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும், தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்காக நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம், சில தலைவர்கள் அல்லது சில குழுக்களின் கர்வத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
கேள்வி கேட்க பணம் வாங்கியதற்காக 11 எம்பிக்கள் நீக்கப்பட்டனர், அவையில் மிளகுத்தூள் தூவப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதிலும், தற்போது நடப்பது போன்ற நாடகப் போராட்டங்களை இதுவரை நான் பார்த்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b