சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரை பயன்படுத்தி தவறான தகவல் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை கலெக்டர் எச்சரிக்கை
சென்னை, 11 மார்ச் (ஹி.ச.) சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரை பயன்படுத்தி தவறான தகவல் மற்றும் கடிதங்கள் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட
சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரை பயன்படுத்தி தவறான தகவல் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை கலெக்டர் எச்சரிக்கை


சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)

சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரை பயன்படுத்தி தவறான தகவல் மற்றும் கடிதங்கள் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி தவறான நபர்கள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிரான மற்றும் தவறான செயல். இது போன்ற தவறான தகவல் மற்றும் கடிதங்கள் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் இது போன்ற தகவல், கடிதங்கள் ஏதேனும் பெற்றிருந்தாலும் அல்லது பெறப்பட்டாலும் பொது மக்கள் யாரும் பயப்படவும், பதட்டப்படவும் வேண்டாம்.

இது குறித்து தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது யார் மீதாவது சந்தேகம் இருந்தாலோ தலைவர், முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஏ.டி.ஆர். கட்டிடம், வடக்கு கோட்டை சாலை, ஐகோர்ட்டு வளாகம், சென்னை - 600 104 என்ற முகவரியில் நேரில் அணுகலாம். மேலும், 044 - 2955 1065 என்ற தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM