Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மார்ச் (ஹி.ச)
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள பல்வேறு சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதோடு பிரபல ஹோட்டல்கள் விறகை வைத்து உணவை சமைக்க தொடங்க உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் (கிரசென்ட்) விறகு அடுப்பு அமைத்துள்ளனர்.
கையிருப்பில் இருக்கும் கொஞ்சம் கேஸ் தீர்ந்துவிடும் என்பதால் விறகு அடுப்பு அமைத்து விறகு கட்டைகளை இறக்கி வைத்துள்ளனர்.
கேஸ் தட்டுபாடு பிரச்சனை தீரும் வரை விறகு அடுப்பில் சமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பல்வேறு உணவு வகைகள் கிடைக்காது என சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதோடு நேரத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் எளிய மக்களுக்கு உணவை வழங்கக்கூடிய சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலை நீடித்தால் உணவு விலையும் உயர வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் சிலிண்டர் விநியோகம் சீராக வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ