Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)
இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தமிழகத்தின் மாணவ, மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கல்வி என்பது ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கே அல்ல; சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறை கல்வியின் மூலம் தங்களின் திறமையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் முக்கியமான கட்டமாக இந்தத் தேர்வுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல மாதங்களாக நீங்கள் செய்த உழைப்பையும் தயாரிப்பையும் நம்பிக்கையுடன் வெளிப்படுத்துங்கள்.
பதற்றம் இன்றி அமைதியாகவும் தெளிவாகவும் தேர்வுகளை எழுதுங்கள்.
உங்கள் முயற்சிக்கு தகுந்த வெற்றி கிடைத்து உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியால் உயர்ந்து, அறிவால் சமூகத்திற்கு சேவை செய்யும் தலைமுறையாக நீங்கள் உருவாக வேண்டும் என்பதே என் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ