கோவையில் 'கோவை டிஜி காப்' என்ற வாட்ஸ்அப் Bot தொடக்கம்
கோவை, 11 மார்ச் (ஹி.ச) பொதுமக்களுக்கு விரைவான மற்றும் எளிய காவல் சேவைகளை வழங்கும் நோக்கில், கோவை மாவட்ட காவல்துறையினரால் புதிய டிஜிட்டல் முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “Kovai Digi Cop” என்ற Wha
Covai Digital Cop


கோவை, 11 மார்ச் (ஹி.ச)

பொதுமக்களுக்கு விரைவான மற்றும் எளிய காவல் சேவைகளை வழங்கும் நோக்கில், கோவை மாவட்ட காவல்துறையினரால் புதிய டிஜிட்டல் முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “Kovai Digi Cop” என்ற WhatsApp மூலம் இயங்கும் Chat Bot சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க நிகழ்ச்சி மேற்கு மண்டல IG சரவணசுந்தர், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் 98400-91100 என்ற எண்ணிற்கு WhatsApp மூலம் “Hi” என குறுஞ்செய்தி அனுப்பினால், காவல்துறையினரின் உதவி மற்றும் தேவையான தகவல்கள் உடனடியாக பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN