2026 ஐபிஎல் - குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் நியமனம்
புதுடெல்லி, 11 மார்ச் (ஹி.ச.) இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மே 31-ந்தேதி வரை நடைபெற உள்ள 19-வது ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த முக்கியமான தொடர் 28-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈ
2026 ஐபிஎல் - குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் நியமனம்


புதுடெல்லி, 11 மார்ச் (ஹி.ச.)

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மே 31-ந்தேதி வரை நடைபெற உள்ள 19-வது ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த முக்கியமான தொடர் 28-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு அணியைப் பற்றிய புதிய தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM