Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 11 மார்ச் (ஹி.ச)
கன்னிவாடி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே குயவநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவரின் மனைவி செவந்தியம்மாள் (50) தோட்டத்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், சார்பு ஆய்வாளர் சிவநாதன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN