கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம் - பிரதமர் மோடி
கொச்சி, 11 மார்ச் (ஹி.ச.) இன்று கேரள வருகை தந்துள்ள பிரதமர் மோடி அகில கேரள தீவர சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை கேரளம்
கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம் - பிரதமர் மோடி


கொச்சி, 11 மார்ச் (ஹி.ச.)

இன்று கேரள வருகை தந்துள்ள பிரதமர் மோடி அகில கேரள தீவர சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதனை பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நனவாக்கி உள்ளது. இந்த அழகான இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்துள்ளது.

அனைவரின் முயற்சிகளுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளம் என பெயரை மத்திய அரசு மாற்றியிருப்பது. மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

கேரள வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.

தங்கள் உயிரை பணயம் வைத்தும் பல உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகம் கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவர் சமூகத்தினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

எங்கள் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமாகவும் மாறும், வளர்ச்சி அடைந்த கேரளத்தை உறுவாக்க வழிவகுக்கும். தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் அவர்களுக்கு எளிதாகிவிட்டது. முந்தைய ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக மீனவர் சமூகத்தை புறக்கணித்தனர்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பாஜ-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது.

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், கேரளத்திற்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b