Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 மார்ச் (ஹி.ச.)
கோவை வரும் சிறப்பு ரெயில் (06182), ஜெய்ப்பூர்-அஜ்மீர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து வருகிற மே 7-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06181), ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்-ஜெய்ப்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டுகிறது.
மறுமார்க்கமாக, ஜெய்ப்பூரில் இருந்து வருகிற மே 10-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் சிறப்பு ரெயில் (06182), ஜெய்ப்பூர்-அஜ்மீர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, அஜ்மீரில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM