முதல் ஒரு நாள் ஆட்டம் - பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி
மிர்பூர், 12 மார்ச் (ஹி.ச.) வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று மிர்பூரில் நடைபெற்றது. போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கே
முதல் ஒருநாள் ஆட்டம் - பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி


மிர்பூர், 12 மார்ச் (ஹி.ச.)

வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று மிர்பூரில் நடைபெற்றது.

போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச முடிவு செய்தார். எனவே, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணியில் ஃபஹீம் அஸ்ராப் மட்டும் நிலைத்து நின்று 37 ரன்கள் எடுத்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.

வங்கதேச அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

Hindusthan Samachar / JANAKI RAM