Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 12 மார்ச் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் சேகர் (வயது 40) என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆனந்த சேகரைக் கைது செய்தனர்.
விசாரணையில் சிறுமிகளிடம் ஆனந்த் சேகர் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Hindusthan Samachar / vidya.b