அடுத்த மாதம் முதல் எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை - விரைவில் உலக முழுவதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டம்
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து டெஸ்லா அதிபர் எலான் மஸ்க
அடுத்த மாதம் முதல் எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை - விரைவில் உலக முழுவதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டம்


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரை விலைக்கு வாங்கியது முதல் அதற்கு எக்ஸ் என பெயர் சூட்டியது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், எக்ஸ் தளத்தை “எவரிதிங் ஆப்” என மாற்றும் திட்டத்தில் களமிறங்கியுள்ள எலான் மஸ்க்.

அதன் ஒரு பகுதியாக எக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் தங்கம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதற்காக விசா கார்ட் நிறுவனத்துடன் கடந்த மாதம் எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 40 மாகாணங்களில் முதல் கட்டமாக அமலுக்கு வரும் இந்த சேவையை விரைவில் உலக முழுவதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM