அடகு கடை உரிமையாளரை வரவைத்து கத்தி முனையில் 28 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற நான்கு நபர்கள்
செங்கல்பட்டு, 12 மார்ச் (ஹி.ச.) சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உத்மத் சந்த் என்பவர் அதே பகுதியில் துணிக்கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று நகைகளை வாங்கி அதற்கு உரிய பணத்தை வழங்குவதை தொட
நகை கொள்ளை


செங்கல்பட்டு, 12 மார்ச் (ஹி.ச.)

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உத்மத் சந்த் என்பவர் அதே பகுதியில் துணிக்கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார்.

மேலும் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று நகைகளை வாங்கி அதற்கு உரிய பணத்தை வழங்குவதை தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் 30 லட்சம் மதிப்பிலான 50 சவரன் நகைகள் உள்ளது.

தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனவே சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதிக்கு வரும்படி தெரிவித்தாகவும், அங்கு நானும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருடன் சென்றபோது அற்புதராஜ் உடன் இருந்த நான்கு நபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து தான் எடுத்து வந்த 28 லட்சம் ரூபாயை கத்தி முனையில் பறித்துக் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சேலையூர் காவல் ஆய்வாளர் பிரவின்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும் புகார் அளித்த நகைக் கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,

தொடர்ந்து இதுபோன்று பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வந்தவுடன் அவர்கள் நகைகள் தந்தயுடன் அதற்கு தேவையான பணத்தை வழங்குவது வழக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த கட்ட விரசாரணையில் போலீசார் இறங்கி சில CCTV காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் அடகு கடை உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு பேசிய தொலைபேசி நம்பரை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் வந்த நிலையில் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட ஈசிஆர் சாலைக்கு சென்று போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஈ சி ஆர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் போலீசார் அதிரடியாக இரவு 11 மணி அளவில் சோதனை நடத்தினர்.

அப்பொழுது நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பணத்தை கத்தி முனையில் பறித்துச் சென்ற நான்கு நபர்களும் ஜாலியாக திருடிய பணத்தில் மது அருந்தினர்.

இதனை பார்த்த போலீசார் கைது அவர்களை கைது செய்து சேலையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது.

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரித்திரப்பதிவு குற்றவாளி அற்புதராஜ். பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற சுண்டு கார்த்தி, ஜெயக்குமார்.

மற்றும்

சேலையூர் பகுதியை சேர்ந்த ராக்கி என்பதும் தெரிய வந்தது.

மேலும்

அனைவருக்கும் அதிக அளவில் கடன் பிரச்சினை இருந்த காரணத்தால், கடனை அடைப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் நகைக் அடகு கடை உரிமையாளர் எடுத்து வரும் பணம் கணக்கில் வராத பணம் என்பதால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க மாட்டார் என்பதை அறிந்தே தான் கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் அடகு கடை உரிமையாளர் பணத்தை எடுத்துக்கொண்டு தாம்பரம் வரும்போது பிரபல தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரையும் அழைத்துக் கொண்டு பணத்தை எடுத்துச் சென்று தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது சுமார் மூன்று லட்ச ரூபாய் வரை பணம் கீழே விழுந்ததாகவும் தகவர்கள் வெளியாகி உள்ளது.

சம்பவம் நடைபெற்ற இரண்டு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தததால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் காவலர்களை பாராட்டியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam