கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு – மார்ச் 30-க்குள் அகற்றாவிட்டால் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் சேலம் ஆ. இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் , கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள அருள்மிகு உத்தம கரகம் திருக்
உயர்நீதிமன்றம்


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் சேலம் ஆ. இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

அவர் தாக்கல் செய்த மனுவில் , கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள அருள்மிகு உத்தம கரகம் திருக்கோயில் , அஞ்செட்டி துர்க்கத்தில் உள்ள அருள்மிகு மாதேசுவர சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க 2023ல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட்டதாகவும் பிறகு , இத்திருக்கோயில் சொத்துக்களை அரசு அதிகாரிகளுடன் கடந்த ஆண்டு மே மாதம் பார்வையிட்டதாகவும் 7 மாதங்கள் கடந்த பிறகு , கடந்த வாரம் அதிகாரிகளுடன் மீண்டும் சென்று பார்வையிட்ட போது, ஏற்கனவே

கோவில் இல்லத்தை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெற்றதாகவும் அது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் அந்த கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்றும் தற்போது

நிறுத்தப்பட்ட கட்டுமானங்கள் முழுமை பெற்றுள்ளதாகவும் , புதியதாக கட்டுமானம் தற்போது நடந்து வருவதாகவும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து அறநிலைய துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

இந்த வழக்கானது இன்று நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது .

இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக கூறி

கோவில் செயல் அலுவலர் சின்னசாமி அனுப்பிய அறிக்கையை

நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் மேற்கண்ட இரண்டு கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் அவற்றை அறநிலைத்துறை கடந்த 9ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்றும்,

புதிதாக கட்டுமானம் நடைபெறும் ஆக்கிரமிப்புகளில் பாதியை மீட்டு விட்டதாகவும் ஒரு பகுதி மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றி விடாமல் சிலர் போராட்டம் செய்வதாகும்

தெரிவித்திருந்தார்.

மேலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றின் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது மனுதாரர்

ராதாகிருஷ்ணன் ஆஜராகி அத்து மீறி நுழைந்து கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை மீட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி தண்டபாணி ,

கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றாவிடில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணை வரும் 30 ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam