Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)
சென்னை பூந்தமல்லியில் இருந்து அரசு பேருந்தை ஓட்டுநர் அழகுராஜா சேலத்திற்கு
செல்வதற்காக அரசு பேருந்தை ஒட்டி வந்துள்ளார் இவருடன் ஓட்டுநர் மணிவேல் உட்பட
பத்துக்கு மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
மதுரவாயில் பைபாஸ் வழியாக பேருந்து தாம்பரம் நோக்கி வந்த போது அனகாபுத்தூர்
அருகே முன்னாள் சென்ற கனரக லாரியின் மீது திடீரென அரசு பேருந்து ஓட்டுநரின்
கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பயங்கர வேகத்துடன் லாரியின் பின்புறம் மோதியது. இதில் அரசு தேர்ந்தென் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது.
இதில் அரசு பேருந்தை ஓட்டிய அழகுராஜா பலத்த படுகாயம் அடைந்து இரத்தம் சொட்டியது.
நடத்துனர் மணிவேல் மற்றும் பேருந்தில் பயணம் செய்த
6 -க்கும்
மேற்பட்டோர்களுக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக விரைந்து வந்த போக்குவரத்து
போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் காயம் அடைந்த நபர்களை ஆம்பூலன்ஸ்
மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
மேலும் கனரக லாரி ஓட்டி வந்தது கோவிந்தராஜ் என்பதும் தெரியவந்தது. இது சம்பந்தமாக சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் மதுரவாயில் பகுதியில் இருந்து
அனகாபுத்தூர் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து
நின்றது.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam