பால் கலப்படம் - இந்திய உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத சில பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விற்பனையாளர்கள் தங்களைப் பதிவு செய்யாமலோ உணவு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்வதாகவும் உரிமத்தைப் பெறாமல் செயல்படுவதாவும் உணவு பாதுகாப
Milk


Hs


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத சில பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விற்பனையாளர்கள் தங்களைப் பதிவு செய்யாமலோ உணவு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்வதாகவும் உரிமத்தைப் பெறாமல் செயல்படுவதாவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

அனைத்து பால் உற்பத்தியாளர்களும் (கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பால் கூட்டுறவு சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக இருந்து, முழுப் பாலை சங்கத்திற்கு வழங்குபவர்கள் அல்லது விற்பனை செய்பவர்கள் தவிர) மற்றும் பால் விற்பனையாளர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு அல்லது தொடர்வதற்கு முன், FSSAI-யில் தங்களை கட்டாயமாகப் பதிவு செய்யுமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பால் கலப்படம் தொடர்பான சந்தேகத்திற்குரிய சமீபத்திய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் உரிமம் தேவைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். மத்திய மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அமலாக்க அதிகாரிகள், அத்தகைய அனைத்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விற்பனையாளர்களின் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்க்க சம்பந்தப்பட்ட நியமிக்கப்பட்ட அதிகாரிகள்/மத்திய உரிம அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதலாக, பால் உற்பத்தியாளர்/பால் விற்பனையாளர்களால் பயன்படுத்தப்படும் பால் குளிர்விப்பான்கள் (பால் உற்பத்தியாளர்/பால் விற்பனையாளர்களால் பயன்படுத்தப்படும்) அவ்வப்போது ஆய்வு செய்து, சரியான சேமிப்பு வெப்பநிலை மற்றும் குளிரூட்டியின் தேவையான தேவைகள் எல்லா நேரங்களிலும் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யவும், இதனால் பால் பொருட்கள் கெட்டுப்போவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

உரிய வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அனைத்து பால் உற்பத்தியாளர்களும் (பால் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள்)/பால் விற்பனையாளர்களும், பொருந்தக்கூடிய வகையில், தேவையான FSSAI பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய, அந்தந்த அதிகார வரம்பில் சிறப்புப் பதிவு இயக்கங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றன.

மேலும், FSSAI ஏற்கனவே டிசம்பர் 16, 2025 தேதியிட்ட F.No. RCD-02001/382/2025-Regulatory-FSSAI மூலம் பால் மற்றும் பால் பொருட்களுக்கான சிறப்பு அமலாக்க இயக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ள ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, அதாவது, ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30/31 ஆம் தேதிகளுக்குள், தவறாமல் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என இந்திய உணவு பாதுபாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ