Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.)
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
ஆனால், பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார். ஆனால் முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக அவர் பீதியில் இருக்கிறார்.
அதானி வழக்கு, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் அவர் பீதியடைந்துள்ளார்.
மக்களவைக்குள் கூட அவரால் வர முடியவில்லை.
ஆனால் அவர் மக்களை பீதியடைய வேண்டாம் என்று சொல்கிறார்.
நேற்று நீங்கள் பார்த்திருக்கலாம்.
பிரதமர் மோடியின் இருக்கை காலியாக இருந்தது,என்றார்.
Hindusthan Samachar / JANAKI RAM