முன்னாள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக இன்று பதவியேற்பு
கொல்கத்தா, 12 மார்ச் (ஹி.ச.) மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் தான் தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். அதன்ப
R.N. Ravi takes oath as West Bengal Governor today.


கொல்கத்தா, 12 மார்ச் (ஹி.ச.)

மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இத்தகைய சூழலில் தான் தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.

அதன்படி ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள

'லோக் பவனில்' இன்று காலை சுமார் 11:30 மணியளவில் நடைபெற்றது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டப்பேரவைத் தலைவர் பிமன் பந்தோபாத்யாய் மற்றும் இடது முன்னணித் தலைவர் பிமன் போஸ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் இந் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ளத் தயாராகி வரும் மேற்கு வங்க மாநிலத்தில், ரவியின் இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b