Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 13 மார்ச் (ஹி.ச.)
ஈரோட்டில் அனைத்திந்திய பிளாஸ்டிக் நாற்காலி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் செந்தில் முருகன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
நடந்து வரும் உலகளாவிய போர் சூழ்நிலையின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களின் விலை, போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலையை விட சுமார் 50% வரை உயர்ந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள பிளாஸ்டிக் நாற்காலி உற்பத்தியாளர்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் நாற்காலி உற்பத்தி துறை என்பது 5% முதல் 10% வரை மட்டுமே லாப விகிதம் கொண்ட குறைந்த லாபத் துறை ஆகும். இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் உற்பத்தியை தொடர்வதும், அதே சமயம் வங்கி வட்டி, ஊழியர் சம்பளம், மின்சார செலவுகள் மற்றும் பிற நிர்வாகச் செலவுகளை சந்திப்பதும் மிகுந்த சிரமமாகியுள்ளது.
இந்த நிலை தொடருமானால் நாடு முழுவதும் 50 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்து வரும் பல சிறு மற்றும் நடுத்தர அளவிலான பிளாஸ்டிக் நாற்காலி உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நாடு முழுவதும் 50 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்படும் சூழல். தமிழகத்தில் சுமார் நேர்முகம் மற்றும் மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது.
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த நிலையை கவனித்து மூலப்பொருள் விலை நிலைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகள், இறக்குமதி வரி தளர்வுகள், குறைந்த வட்டி விகிதத்தில் நிதி உதவி போன்ற அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்திந்திய பிளாஸ்டிக் நாற்காலி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
Hindusthan Samachar / ANANDHAN